Saturday 27 October 2012

தமிழரின் அவல நிலை

--------------------------------------

நன்றாக யோசித்துப் பார்த்தால் தமிழர்களின் நிலை பரிதாபமாகவே உள்ளது. வரலாற்று காலமுதல் இந்நாள் வரை நாம் அடுத்தவருக்கு அடிமைப்பட்ட நிலையிலேயே வாழ்ந்துள்ளது தெரிகிறது. சங்கப் பாடல்கள் நாம் காதலையும் வீரத்தையும் போற்றி என்று கூறி பாடல்கள் எழுதிவைத்துள்ளனர். ஆனால் அதன்பின் வந்த காலங்களில் தமிழரின் வீரம் எங்கு போனது என்று தெரியவில்லை. சோழர் காலத்தில் நாம் வடக்கே இமயம் வரையும் கடல்தாண்டி தென் கிழக்கு ஆசியா வரை படை எடுத்து வென்றதாக அறிகிறோம். ஆணால் அதன்பின்பு அடிமை இனமாகவே வாழ்ந்துள்ளோம்.

Thursday 25 October 2012

எனது அகப்பக்கத்தில் தமிழ்...

------------------------------------------------

இதை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன்.

இத்தனை காலமாக தமிழில் எழுதுவது முடியாமல் இருந்தது. பலரிடம் கேட்டும் பலன் இல்லாமல் போனது.

திடீரென்று சென்ற வாரம் அது நிறைவேறியது. நடந்த இடம் குளுவாங் புனித லூயிஸ் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு உதவியவர் என் நண்பர் ஆ.வி. டேவிட். இவர் அந்த ஆலயத்தின் முக்கிய உறுப்பினர். சில வாரங்களுக்குமுன் அவருக்கு திண்ணையில் பின்னூட்டம் எழுத சொல்லித்தந்தேன். அப்போது அவருடைய புது மடிக்கணினியில் தமிழ் இல்லை. எனக்கும் அவ்வாறே நிலைதான். நான் அவருக்கு ஆங்கிலத்தில்தான் எழுத சொல்லித்தந்தேன். அவர் தமிழை ஆங்கிலத்தில் எழுதி திண்ணைக்கு அனுப்பிகொண்டிருந்தார்.

நான்கூட இவ்வாறு ஆங்கிலத்திலேயே திண்ணையில் பின்னூட்டங்கள் எழுதியதால் பல பிரச்னைகள் எழுந்தன. ஒரு சிலர் அதை ஆட்சேபித்தனர். நான் திண்ணை நிர்வாகத்தினருக்கு என் நிலைமையை விளக்கி அனுமதி பெற்றேன்.

நான் நண்பரிடம் நாம் தமிழில் எழுத யாராவது உதவுவார்களா எனக் கேட்டேன். அவர் அது சுலபம் என்றார். நான் எப்படி என்றேன். அவரின் நண்பர் ஒருவர் உள்ளதாகக் கூறினார்.

சென்ற ஞாயிறு மாலை புனித லூயிஸ் ஆலயத்தில் அவரின் நண்பரை சந்தித்தோம். அவரின் பெயர் ராபர்ட். அவர் ஒரு சில நிமிடங்களில் அதை சொல்லி தந்து விட்டார். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி! எனது நீண்டநாள் அசை அன்று நிறைவேறியது. இனிமேல் நானும் இங்கே தமிழில் எழுதி மகிழ்வேன்.

இது நடந்தது ஆலயம் என்பதால் உடன் ஜெபம் செய்து கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

வீட்டில் தமிழ் படிக்க கூடிய பலர் ராசி பலனையும் நான்கு நம்பர் முடிவுகளையும் விரும்பி பார்ப்பதுண்டு. சிலர் நடுப்பக்க சினிமா நடிகைகளின் பெரிய வண்ண படங்கள் பார்த்து ரசிப்பதுண்டு.

கதை கட்டுரைகள் கவிதைகள் படிப்பதற்கு ஆர்வமும் பொறுமையும் வேண்டும். இந்த பண்பு எல்லாருக்கும் எளிதில் வராது.ஆகவே நமது படைப்பாளர்களின் படைப்புகளை ஆர்வத்துடன் படிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவே.

படைப்பாளர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இவர்களில் பெரும்பாலோர் எல்லா தமிழ் பத்திரிகையையும் வாங்குவது இல்லை. சிலர் தங்களின் படைப்பு வந்தால்தான் பத்திரிகை வாங்குகின்றனர்.இவர்கள் அடுத்த படைப்பாளரின் படைப்புகளை விரும்பி படிப்பதில்லை.

நமது கல்வி நிலை காரணமாக பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை மலாய் பள்ளிகளில் சேர்த்து விட்டதால் அவர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. இந்த பரிதாபத்தை நான் பல இளைஞரிடமும், இளம் பெண்களிடமும் பார்த்து வருகிறேன். இவர்களை இனிமேல் நாம் இனிமேல் ஏதும் செய்ய இயலாது.

. ஆகவே நமது வாசகர் வட்டம் என்பது மிகவும் சிறியது என்பதே மறுக்க முடியாத உண்மை!