Thursday, 25 October 2012

வீட்டில் தமிழ் படிக்க கூடிய பலர் ராசி பலனையும் நான்கு நம்பர் முடிவுகளையும் விரும்பி பார்ப்பதுண்டு. சிலர் நடுப்பக்க சினிமா நடிகைகளின் பெரிய வண்ண படங்கள் பார்த்து ரசிப்பதுண்டு.

கதை கட்டுரைகள் கவிதைகள் படிப்பதற்கு ஆர்வமும் பொறுமையும் வேண்டும். இந்த பண்பு எல்லாருக்கும் எளிதில் வராது.ஆகவே நமது படைப்பாளர்களின் படைப்புகளை ஆர்வத்துடன் படிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவே.

படைப்பாளர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இவர்களில் பெரும்பாலோர் எல்லா தமிழ் பத்திரிகையையும் வாங்குவது இல்லை. சிலர் தங்களின் படைப்பு வந்தால்தான் பத்திரிகை வாங்குகின்றனர்.இவர்கள் அடுத்த படைப்பாளரின் படைப்புகளை விரும்பி படிப்பதில்லை.

நமது கல்வி நிலை காரணமாக பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை மலாய் பள்ளிகளில் சேர்த்து விட்டதால் அவர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. இந்த பரிதாபத்தை நான் பல இளைஞரிடமும், இளம் பெண்களிடமும் பார்த்து வருகிறேன். இவர்களை இனிமேல் நாம் இனிமேல் ஏதும் செய்ய இயலாது.

. ஆகவே நமது வாசகர் வட்டம் என்பது மிகவும் சிறியது என்பதே மறுக்க முடியாத உண்மை!

No comments:

Post a Comment